தினமணி 04.04.2013
போளூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
போளூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
போளூர் பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை, துணிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இக் கடைகளின் முன்பக்கம் தகர ஷீட் அமைத்து கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நேரிடுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே உத்தரவுப்படி, நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் அய்யாதுரை, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன், பேரூராட்சி செயல் அலுவலர் நிஷாத் ஆகியோர் தலைமையில் பழைய பஸ் நிலையம், சிந்தாதிரிப்பேட்டை தெரு மற்றும் புதிய பஸ் நிலையப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.