தினமலர் 06.03.2010
மகப்பேறு உதவி
சிவகங்கை : அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை அதிகரிக்க, “ஜனனி சுரக்ஷா‘ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன்படி, மாநகராட்சி, நகராட்சி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு 600 ரூபாய், கிராமங்களில் 700 என உதவி வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில், 10 அரசு மருத்துவமனை, ஆறு தாய், சேய் மருத்துவமனை, 46 ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி மருத்துவமனைகளில், 2009 ஜூலை 1 ம் தேதி முதல் நிதி உதவி வழங்கப்பட்டது. இதன்படி 11 ஆயிரம் பெண்களுக்கு 71 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. தமிழக அரசின் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் பிப்ரவரி வரை, 11 ஆயிரத்து 675 பேருக்கு, தலா 6,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.