தினமணி 20.08.2009
மகளிர் குழுக்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி
பேரையூர், ஆக. 19: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் “பெட்கிராட்‘ தொண்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பெட்கிராட் நிறுவன நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி, கனரா வங்கி மேலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சித் தலைவர் கருமலையான், உறுப்பினர் கோபால், மகளிர் திட்ட அலுவலர் மகேந்திரன், ஒருங்கிணைப்பாளர் எஸ்தர் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.