மக்களை நோக்கி நகராட்சிநிர்வாகம் திட்டம் துவக்கம்
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி சார்பில், “மக்களை நோக்கி நகராட்சி நிர்வாகம்’ என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, நகராட்சிக்கு உள்பட்ட, ஏழாவது மற்றும் எட்டாவது வார்டு மக்களுக்கு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முகாம் நடந்தது.நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சேர்மன் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்து பேசினார். முகாமில், பத்திர நகல், வில்லங்கச் சான்று ஆகியவற்றை இணைத்து, சொத்துவரி பெயர் மாற்றம், குடிநீர் கட்டண பெயர் மாற்றம், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவுகளுக்கு சான்று வழங்குதல், புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்பட, 81 மனுக்கள் பெறப்பட்டது.
தகுதியான, 31 மனுக்களுக்கு அந்த இடத்திலேயே விசாரணை மேற்கொண்டு, தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.