தினமலர் 27.03.2010
மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி
மதுரை : மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற் குட்பட்ட வார்டுகளின் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.கமிஷனர் செபாஸ்டினிடம் ஆக்கிரமிப்பு அகற்றுதல், குடிநீர் வசதி செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, சுந்தரராஜபுரம் மாநகராட்சி பள்ளி விரிவாக்க கட்டட பணிகளை ஆய்வு செய்த அவர், விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரருக்கு உத்தரவிட்டார். பெரியார் பஸ் ஸ்டாண்டில் இரண்டு கோடி ரூபாயில் நடக்கும் மேற்கூரை பணியினையும் பார்வையிட்டார்.