தினமலர் 03.03.2010
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மாநகராட்சி நிர்வாகம் ஆயத்தம்!
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் எடுக்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக, ஒவ்வொரு வார்டிலும் வீதிதோறும் உள்ள வீடுகளின் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக் கெடுக்கப்படும். அதன்படி, இந்தாண்டு கணக்கெடுப்பு நடக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, மாநிலங்களில் வருவாய் எல்லைகள்; காவல்துறை எல்லைகளை மாற்றியமைக்கக் கூடாது; புதிய தாலுகா, போலீஸ் ஸ்டேஷன்கள் உரு வாக்கக் கூடாது என தடை விதிக்கப் பட்டுள்ளது. 2011 மார்ச் மாதம், மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடைய உள்ளது. அதுவரை, இந்நிலையே நீடிக்கும்.திருப்பூரில் மக்கள் தொகை கணக் கெடுப்புக்காக, மாநகராட்சி நிர் வாகம் ஆயத்த பணியை துவக்கி உள்ளது. அப்பணிக்கு தேவைப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பட்டி யல் தயாரிக்கப்படுகிறது. இதுதொடர் பாக, மாநகராட்சி பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கணக்கெடுப்பு பணிக்கான ஆசிரியர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த 2001 மக்கள் தொகை கணக் கெடுப்புப்படி, மாநகராட்சி பகுதி யில் மூன்று லட்சத்து 51 ஆயிரத்து 501 பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டது. 2007ல் இந்நகர மக்கள் தொகை நான்கு லட்சத்து 32 ஆயிரம் என தோராயமாக மாநகராட்சி கணக்கிட்டுள்ளது. பின்ன லாடை தொழில் நகரமான திருப் பூரில், வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக் கானவர்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். தற்போது, இந்நகர மக்கள் தொகை ஆறு லட்சத்துக்கும் கூடுதலான இருக்க வாய்ப்புள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு ஊழியர்களை அனுப்பு வதற்கு முன்னதாக, வீதிதோறும் உள்ள வீடுகள் பற்றிய கணக்கெடுப் பில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. 150 வீடுகளுக்கு ஒரு கணக்கெடுப்பாளர் நியமிக்க வேண்டும். அல்லது, 600 முதல் 750 மக்களுக்கு ஒரு கணக் கெடுப்பாளரை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆறு கணக்கெடுப்பாளர்களை கண் காணிக்க, ஒரு மேற்பார்வையாளர் வீதம் நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 540 கணக்கெடுப்பாளர்கள்; 90 மேற்பார்வையாளர்கள் நியமிக்க வேண்டும். ஆனாலும், திருப்பூர் பகுதியில் மக்கள் தொகை அதிக ளவில் காணப்படுவதால், கூடுதலாக 100 ஊழியர்கள் நியமிக்க வாய்ப்புள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப் படும்; ஜூன் மாதமே கணக்கெடுப்பு பணி துவங்கும்.