தினமணி 31.05.2010
மக்கள் தொகை கணக்கெடுப்பு: உடுமலை நகராட்சி வேண்டுகோள்
உடுமலை,மே 30: 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக கணக்கெடுப்பாளர்கள் வீடு தேடி வரும்போது உரிய விவரங்களை கொடுத்து உதவுமாறு உடுமலை நகராட்சி பொதுமகக்ளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
÷இது குறித்து உடுமலை நகராட்சி ஆணையாளர் அ.சுந்தராம்பாள் சனிக்கிழமை விடுத் துள்ள செய்தி:
÷தமிழ்நாட்டில் வீடுகள் கணக்கெடுப்பும், தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கணக்கெடுப்பாளர்கள் பொதுமக்களின் வீடுதேடி வந்து விவரங்களை சேகரிக்க உள்ளனர். அப்போது கீழ்க்கண்ட விவரங்களை படிவங்களில் கணக்கெடுப்பாளர்கள் பூர்த்தி செய்வார்கள். அதன்படி வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் சில முக்கிய விவரங்கள்:
÷குடும்பத் தலைவர் பெயர், குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மொத்த நபர்களின் எண்ணிக்கை, வீட்டின் கட்டுமான பொருள், குடிநீர் வசதி, சமையல் வசதி, கழிப்பிட வசதி போன்றவைகள், குடும்பத்தின் வசமுள்ள பொருட்கள்(சைக்கிள், மோட்டார் சைக்கிள், மொபட், கார், ஜீப், வேன், ரேடியோ, தொலைபேசி, கைபேசி, கணினி).
÷தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்த விவரங்கள்: குடும்ப தலைவர் பெயர், குடும்ப அங்கத்தினர்களின் பெயர், ஒவ்வொரு நபரின் பிறந்த தேதிகள், திருமண நிலை, தொழில், தந்தை, தாயார், துணைவர் பெயர், பிறந்த ஊர், தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி. கணக்கெடுப்பாளர்கள் வரும்போது மேற்கண்ட விவரங்களை தேடாமல் உடனே கொடுப்பதற்கு குடும்ப அங்கத்தினர்களின் பிறந்த தேதி உள்ளிட்டவைகளை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருக்க வேண்டும்.