தினமலர் 05.05.2010
மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி
மதுரை: மதுரை மாநகராட்சி எல்லைக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பது தொடர்பான பயிற்சி துவங்கியது.மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கான பயிற்சி, மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் காக்கை பாடினியார் பள்ளி, தெற்கு மண்டலத்தில் ஈ.வெ.ரா., நாகம்மை பள்ளி, மேற்கு மண்டலத்தில் வெள்ளி வீதியார் பள்ளி, கிழக்கு மண்டலத்தில் என்.எம்.எஸ்., பள்ளியில் துவங்கியது. மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) தர்ப்பகராஜ் இவற்றை துவக்கினார். மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், கல்வி அலுவலர் அம்மையப்பன், உதவி கமிஷனர் ராஜகாந்தி கலந்துகொண்டனர்.பல்வேறு குழுக்களாக 2500 ஆசிரியர்களுக்கு, 35 தலைமை பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர். மே 12 வரை முதல் கட்டமாகவும், மே 27, 28ல் அடுத்த கட்டமாகவும் பயிற்சி நடக்கும். கமிஷனர் (பொறுப்பு) தர்ப்பகராஜ் கூறும்போது, ”முதன்முறையாக பயிற்சி பெற்றவர்களுக்கு கணக்கெடுப்பு நடைமுறைகள் குறித்து தேர்வும், செயல்முறை விளக்கமும் நடத்தப்படும்” என்றார்.