தினத்தந்தி 24.10.2013
மனைகள், வீடுகளுக்கு சலுகை வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு

மதுரை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் சாலமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மதுரை
பிரிவு மூலம் ஒதுக்கீடு பெற்ற மனைகள், வீடுகள், அடுக்குமாடி
குடியிருப்புகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகிற நவம்பர்
30–ந்தேதி வரை நிலுவைத்தொகை செலுத்துபவர்களுக்கு இது பொருந்தும்.
மாதத்தவணைக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின்
மீதான வட்டி தள்ளுபடி, நிலத்திற்கான இறுதி விலை வித்தியாச தொகையில் ஒவ்வொரு
ஆண்டுக்கும் 5 மாத வட்டி தள்ளுபடி, தாழ்த்தப்பட்ட, பழங்குடியிருனருக்கான
ஒதுக்கீடுகளுக்கு விலையில் 10 சதவீத முன்வைப்பு தொகைக்கு மட்டும் வட்டி
வசூலிப்பது போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் தகவலுக்கு மதுரை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.