தினகரன் 13.01.2011
மரத்தின் வேர் பரவியதால் சாக்கடை அடைப்பு கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நகராட்சி அதிரடி நடவடிக்கை

பொள்ளாச்சி நேரு கல்யாண மண்டப வீதியில் கழிவு நீர் தேங்கிய சாக்கடையில்
மோட்டார் பொருத்திய வாகனம் மூலம் கழிவு நீர் வெளியிற்றப்பட்டது.
மோட்டார் பொருத்திய வாகனம் மூலம் கழிவு நீர் வெளியிற்றப்பட்டது.
பொள்ளாச்சி, ஜன 13:
பொள் ளாச்சி நேரு திருமண மண்டப வீதியில் அரச மரத்தின் வேர் பரவியதால் சாக்கடையில் கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டது. நகராட்சி நிர்வாகம் மின் மோட்டார் பொருத்திய லாரி மூலம் கழிவு நீரை அப்புறப்படுத்தியது.
பொள்ளாச்சி நகராட்சியின் 4வது வார்டுக்குட்பட்ட பகுதி வெங்கடேசா காலனி. இங்குள்ள நேரு திருமண மண்டப வீதியின் ஒரு புற சாக்கடையில் கடந்த சில வாரங்களாக கழிவு நீர் சீராக வெளியேறாமல் அப்படியே தேங்கத் துவங்கியது. இதுகுறித்து பொதுமக்களும், அப்பகுதி வார்டு கவுன்சிலரான முரளி (ம.தி.மு.க.) உள்ளிட்டோர் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் செய்தனர். இதனையடுத்து மின் மோட்டார் பொருத்திய லாரி மூலம் மேற்படி பகுதி யில் சாக்கடையில் தேங்கி நின்ற கழிவு நீரை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதா வது, நேரு திருமண மண்ட பவ வீதியின் ஒரு பகுதியில் சாக்கடையை ஒட்டி மிகப்பெரிய அரச மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் வேர்கள் அதிகமாக சாக்கடைக்குள் பரவியுள்ளதால் கழிவு நீர் சீராக வெளியேறாமல் தடைபடுகிறது. கழிவு நீர் அய்யப்பன் கோயில் ரோடு வழியாக வெளியேறும் விதத்தில் அமைக்கப்பட்ட இந்த சாக்கடையில் ஒரு புறம் மேடாக அமைந்துள் ளது. இக்காரணங்களால் கழிவு நீர் சரிவர வெளியேறாமங் அங்கேயே தேங் கியது.தகவல் அறிந்ததும் உடனடியாக மின் மோட்டார் பொறுத்திய லாரி மூலம் தேங்கிய கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. அரச மரத்தின் ஒரு பகுதி வேர்களை மட்டும் அப்புறப்படுத்த வேண்டும் அல்லது சாக்கடையில் கழிவு நீர் செல்ல ஏதுவாக சீரமைக்க வேண்டும். சாக்கடை கழிவு நீர் அங்கு தேங்காதவாறு விரைவில் இதற்கான மாற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.