தினகரன் 25.05.2010
மராத்தியில் முதுகலை பட்டம் பெற்றால் ஊழியர்களுக்கு இரண்டு இன்கிரிமெண்ட்
மும்பை, மே 25: மராத்தி மொழியில் முதுகலை பட்டம் பெறும் ஊழியர்களுக்கு இரண்டு இன்கிரிமெண்ட் வழங்கப்படும் என மும்பை மாநகராட்சி தெரி வித்துள்ளது.
தெரு சண்டை அரசியல் கொள்கையை மாற்றியுள்ள ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி, கடந்த மாதம் மாநகராட்சியிடம் ஒரு புதுமையான திட்டத்தை முன்வைத்தது. மராத்தி மொழியில் முதுகலை பட்டம் பெறும் மாநகராட்சி ஊழியர்களுக்கு இரண்டு இன்கிரிமெண்ட் வழங்கப் பட வேண்டும் என்பதே அந்த திட்டம்.
இந்த திட்டத்தை மாநகராட்சி கூட்டத்தின் போது நவநிர்மாண் சேனா கவுன்சிலர் மற்றும் எம்.எல்.ஏவான மங்கேஷ் சாங்கலே முன்வைத்தார். இதற்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவிக்க, காங் கிரஸ் மட்டும் எதிர்த் தது. எதிர்த்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் நவநிர்மாண் சேனா திட்டம், மாநக ராட்சி அவையில் வெற்றி பெற்றது.
இது குறித்து சாங் கலே கூறுகையில், “இரண்டு இன்கிரிமெண்ட் கொடுக்கும் போது ஊழி யர்கள் பலர் மராத்தி மொழியில் முதுகலை பட்டம் பெற முயற்சி எடுப்பார்கள். மாணவர்கள் இல் லாததால் பல மராத்தி பள்ளிக்கூடங்கள் மூடப் படும் சூழ்நிலையில், மாநகராட்சியின் இந்த புதிய திட்டத்தால் குறைந் தது பல்கலை கழக மட்டத்திலாவது மராத்தி மொழி காப்பாற்றப்படும்” என்றார்.
மும்பை மாநகராட்சி யின் ஆட்சி மொழியாக மராத்தி மொழி கடந்த 2008, ஜூன் மாதம் அங்கீகரிக்கப்பட்டது. அதன் பின் மாநகராட்சி ஆவணங்கள், அறிக்கைகள் அனைத்துமே மராத்தி மொழிக்கு மாற்றப் பட்டது.
நவநிர்மாண் சேனா வின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் மற்றும் எம்.எல்.ஏ ராஜ்ஹன்ஸ் சிங் கூறுகையில், “மாநக ராட்சியின் ஆட்சி மொழியாக மராத்தி இருக்கும் போது அந்த மொழியில் முதுகலை பட்டம் பெறும் ஊழியர் களுக்கு தனி சலுக்கை அளிக்க வேண்டிய அவ சியம் என்ன இருக்கிறது” என்றார்.