தினமலர் 29.04.2010
மறவபட்டி புதூரில் குடிநீர் தட்டுப்பாடு
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு மறவபட்டி புதூரில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள் ளன. கடந்த சில மாதங் களாக இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சுமார் 2 கி.மீ.,தூரத்தில் உள்ள மூக்கையன்குளம் பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது: ‘ மறவபட்டி புதூருக்கு செல்லும் குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள் ளது. இதனை சரி செய்து மீண்டும் குடிநீர் வழங்குவதற்கு தேவையான திட்ட மதிப்பீடு விபரம் எடுக்கும் பணி முடிவடைந்து விட்டது. விரைவில் இந்த வேலைக்கான டெண்டர் அறிவிக்கப்பட உள்ளது.குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படும்‘ என்றனர்.