தினகரன் 10.08.2010
மலேரியா வேகமாக பரவி வருவதால் மும்பையை சுத்தப்படுத்த கட்சியினருக்கு ராஜ்தாக்கரே உத்தரவு
மும்பை, ஆக.10: மும்பை யில் மலேரியா நோய் வேக மாக பரவி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் பத்துக் கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.
நகரம் சுத்தமாக வைக் கப்படாமல் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி யாவதே இந்நோய் பரவுவ தற்கு காரணம். மலேரியா சாவுகள் அதிகரித்து வரு வதை யொட்டி மும்பையை சுத்தப்படுத்தும் பிரசாரத்தில் பல்வேறு அரசியல் கட்சி களும் இறங்கியுள்ளன. சமீபத்தில் சிவசேனா தலை வர்களும் வடக்கு மும்பை காங்கிரஸ் எம்.பி., சஞ்சய் நிருபமும் வீதிகளில் உள்ள குப்பைகளை கூட்டி பிர சாரம் செய்தனர்.
இந்த நிலையில் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் கட்சியும் மும்பையை சுத்தப் படுத்தும் பிரசாரத்தில் இறங்கி இருக்கிறது.
மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் மும்பையை சுத்தப்படுத்தும்படி ராஜ் தாக்கரே தமது கட்சி தொண்டர்களுக்கு உத்தர விட்டு இருக்கிறார். “குப் பையை எங்கே பார்த்தாலும் அந்த இடத்தை சுத்தப்படுத்தி மலேரியா பரவாமல் பார்த் துக்கொள்ளுங்கள்Ó என்று தன் கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் தமது இந்த நடவ டிக்கை விளம்பர தந்திரம் அல்ல என்பதையும் அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
“தெருக்களை பெருக்கு வது போல சில தலைவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். அதுதான் விளம்பர தந்திரம்Ó என்று அவர் கூறினார்.
மும்பையில் குடிசைப் பகுதிகள் பெருகுவதற்கு எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது என்றும் ராஜ்தாக்கரே தமது கட்சியி னரை எச்சரித்து இருக்கிறார். “நோய்கள் பெருகி வருவ தற்கு, வெளி மாநிலத்தவர் வந்து தங்கி இருக்கும் குடி சைப் பகுதிகள்தான் கார ணம்Ó என்று அவர் குற்றம் சாட்டினார்.
தனியார் நிலங்கள் ஆக் கிரமிப்பு செய்யப்படா மல் இருக்கும் நிலையில் மாநில மற்றும் மத்திய அர சுக்கும் மாநகராட்சிக்கும் சொந்த மான இடங்கள் மட் டுமே ஆக்கிரமிப்பு செய் யப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.
இதுபோன்று நடப்ப தற்கு கவுன்சிலர்களும் அதி காரிகளும்தான் காரணம் என்று குற்றம்சாட்டிய ராஜ் தாக்கரே, இதனை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக் கும்படி கட்சி தொண்டர் களை கேட்டுக்கொண் டார்.
மலேரியாவால் பாதிக் கப்பட்டோரின் எண் ணிக்கை குறித்து மாநக ராட்சி வெளியிட்டுள்ள தக வல்கள் தவறானவை என் றும் அவர் குற்றம் சாட்டி னார். “எனக்கு கிடைத் துள்ள தகவலின்படி மலேரி யாவுக்கு மும்பை கே.இ.எம். மருத்துவமனை யில் மட்டும் 56 பேர் பலி யாகி இருக்கி றார்கள்Ó என்று ராஜ் தாக்கரே கூறினார்.