தினமணி 14.08.2013
தினமணி 14.08.2013
மழைநீர் சேகரிப்புவிழிப்புணர்வு பேரணி
மாமல்லபுரத்தில், பேரூராட்சி சார்பில் மழைநீர்
சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர்
எம்.கோதண்டபாணி தொடங்கி வைத்த இப்பேரணியில் அரசு மற்றும் தனியார் பள்ளி
மாணவ மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள், அட்டைகளை
ஏந்தியபடி மாமல்லபுரம் முக்கிய தெருக்கள் மற்றும் சாலைகள் வழியாக மாணவ,
மாணவிகள் பேரணியாகச் சென்றனர்.
பேரணியில் துணைத்தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பலர்
கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.