தினமணி 14.06.2013
தினமணி 14.06.2013
மழைநீர் சேகரிப்பு இல்லாத கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு!
மழைநீர் சேகரிப்பு அமைப்பு இல்லாத கட்டடங்களுக்கான
அனுமதியை ரத்து செய்தல், குடிநீர் இணைப்பைத் துண்டித்தல் போன்ற
நடவடிக்கைகளைத் தொடருவது என அரக்கோணம் நகராட்சி முடிவு செய்துள்ளது.
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் அரக்கோணம் நகராட்சி அலுவலக
வளாகத்தில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை
நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் செந்தில்முருகன் தலைமை தாங்கினார். நகர்மன்றத் தலைவர்
(பொறுப்பு) கே.ராஜா, நகராட்சி பொறியாளர் ராஜவிஜயகாமராஜ் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
கூட்டத்தில் நகரில் உள்ள கட்டடங்கள் மற்றும் இனி கட்டப்பட உள்ள, இப்போது
கட்டப்பட்டுவரும் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கண்டிப்பாக வைக்க
வேண்டும். மழைநீர் சேகரிப்பு இல்லாத கட்டடங்களுக்கு அனுமதியை ரத்து
செய்வது, குடிநீர் இணைப்பைத் துண்டித்தல் போன்ற நடவடிக்கைகளை தொடருவது என
முடிவு செய்யப்பட்டது.
திறந்தவெளியில் மல,ஜலம் கழிப்பதற்கு தடை!
இதைத் தொடர்ந்து, திறந்தவெளியில் மல,ஜலம் கழிப்பதைத் தடை செய்வது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக குடிசைப் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வை
ஏற்படுத்துவது, பொது கழிவறைகளைச் சுத்தமான முறையில் பராமரிப்பது என்பன
உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.