மழைநீர் சேகரிப்பு கலந்தாய்வுக் கூட்டம்
மழை நீர் சேகரிப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் உடுமலை நகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகர்மன்றத் தலைவர் கேஜிஎஸ்.ஷோபனா தலைமை வகித்தார். ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
பொது மக்களுக்கு மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. உடுமலை நகரத்தை 3 மண்டலங்களாக பிரித்து, 33 வார்டுகளுக்கும் அதற்கென நகராட்சி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. பொறியாளர் செந்தில்குமார், நகரமன்ற துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
விவேகானந்தர் ரதம்: சுவாமி விவேகானந்தரின் ரதத்துக்கு உடுமலை நகராட்சி சார்பில் வரவேற்பு புதன்கிழமை அளிக்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் கேஜிஎஸ்.ஷோபனா விவேகானந்தர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி வரவேற்றார். கோவை ராமகிருஷ்ண மிஷின் வித்யாலயத்தைச் சேர்ந்த தர்மாத்மானந்தா, ஈஷானந்தா ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.