தினமணி 18.06.2013
மழைநீர் சேகரிப்பு குறித்து
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரியநாயக்கன்பாளையம்
பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தினமணி 18.06.2013
மழைநீர் சேகரிப்பு குறித்து
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரியநாயக்கன்பாளையம்
பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி
சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பருவ மழை தொடங்குவதையொட்டி, மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம்
குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில் அரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியில் நடந்த இதன்
தொடக்க நிகழ்ச்சிக்கு, வார்டு கவுன்சிலர்கள் மாரியப்பன், சுப்பிரமணியன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் துவாரகநாத் சிங்
தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை
ஏந்தி முழக்கமிட்டபடி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். சுகாதார
ஆய்வாளர் பரமசிவம், கவுன்சிலர்கள் முருகேசன், சிவராஜ், கிருஷ்ணன், தலைமை
ஆசிரியை மலர்க்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.