தினமணி 26.06.2013
தினமணி 26.06.2013
மழைநீர் சேகரிப்பு விளக்கக் கூட்டம்
திண்டிவனம் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம்
மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த
விளக்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
நகர்மன்றத் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தலைமை வகித்தார். மேலாளர்
கிருஷ்ணராஜ் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பு, வணிக,
தொழிற்சாலை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள்
நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆகியவற்றில் உடனடியாக மழைநீர்சேகரிப்பு திட்ட
கட்டமைப்புகளை வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் ஏற்படுத்த தேவையான
வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார். இதற்கென 33 வார்டுகளிலும் குழு
அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுமென
தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஆணையர் அண்ணாதுரை, நகர்மன்ற துணைத்தலைவர்
ஏ.வி.முகமதுஹரிப், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.