தினமணி 18.06.2013
தினமணி 18.06.2013
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் வ.மணி பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி
வைத்தார். மாமல்லபுரம் பேரூராட்சி கங்கைகொண்டான் மண்டபத்தில் தொடங்கி, பஸ்
நிலையம், அர்சுனன் தபசு, கடற்கரைக் கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட முக்கிய
இடங்கள் வழியாக நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் எம்.கோதண்டபாணி, துணைத் தலைவர் தேவேந்திரன்,
சுகாதார மேற்பார்வையாளர் செல்வராஜ், பள்ளி மாணவ மாணவிகள், மகளிர் சுயஉதவிக்
குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.