தினமணி 24.06.2013
தினமணி 24.06.2013
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போடி நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ் தலைமை வகித்தார்.
ஆணையர் எஸ். சசிகலா ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். மேலாளர் (பொறுப்பு)
முருகதாஸ், பொறியாளர் ஆர்.திருமலைவாசன், சுகாதார ஆய்வாளர் சுல்தான்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, மழை
நீரைச் சேகரிப்பதால் நிலத்தடி நீர் உயர்வதையும், அதன்மூலம் ஏற்படும்
நன்மைகளையும் விளக்கும் வகையில் எழுதப்பட்ட விழிப்புணர்வு வாசகங்கள்
அடங்கிய அட்டைகளை ஏந்தி சென்றனர். மழைநீர் சேகரிப்பு குறித்த விவரங்கள்
அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டன.
பேரணிக்கான ஏற்பாடுகளை நகராட்சி பொறியியல் பிரிவு, சுகாதாரப் பிரிவு
அலுவலர்கள், பிச்சாண்டி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் உள்ளிட்டோர்
செய்திருந்தனர்.