தினமணி 26.06.2013
பண்ருட்டி நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி பள்ளி மாணவர்களை கொண்டு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில் பண்ருட்டி நகரில்
உள்ள பள்ளிகளில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் பதாகைகளை ஏந்தி மழைநீர் சேகரிப்பு குறித்த வாசகங்களை
முழங்கியவாறு முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தை
அடைந்தனர். விழிப்புணர்வுப் பேரணியை நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம்
கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் மல்லிகா, கவுன்சிலர்கள்,
நகராட்சி ஊழியர்கள், வியாபார சங்க மற்றும் நகர முக்கியஸ்தர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.