தினமணி 06.08.2013
தினமணி 06.08.2013
மழை நீர் சேகரிப்புவிழிப்புணர்வுப் பேரணி
சிங்கம்புணரியில் பேரூராட்சி சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணிக்கு தலைவர் லெட்சுமிபிரியா
ஜெயந்தன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். செயல் அலுவலர் மருது முன்னிலை
வகித்தார்.
பேரணியில் மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக்
கூடாது என்பன உள்ளிட்ட பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். மேலும் மழை
நீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்து கோஷமிட்டனர்.
பேரணி பெரிய கடை வீதி, அரசு மருத்துவமனை, சுந்தரம் நகர், திண்டுக்கல்
சாலை வழியாக பேரூராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. இதில் பேரூராட்சி
துணைத் தலைவர் தொல்காப்பியன், கவுன்சிலர்கள் சதீஷ்குமார், குணசேகரன்,
நித்தியா, ரேவதி மணிவண்ணன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.