தினமணி 06.08.2013
திருப்பத்தூரில் பேரூராட்சி சார்பாக மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆறுமுகம்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூர் பேரூராட்சித்
தலைவர் ஆர். சேமசுந்தரம் தலைமை வகித்து பேரணியை தொடக்கி வைத்தார். செயல்
அலுவலர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர்
தங்கதுரை வரவேற்றார்.
பேரணியில் மாணவர்கள் மழை நீர் உயிர் நீர், மழை நீர் சேமிப்பின்
அவசியம் குறித்த வாசக அட்டைகளை ஏந்தி வந்தனர். மதுரை சாலை, அண்ணா சிலை,
பேருந்து நிலையம், தபால் அலுவலக சாலை உள்பட முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற
பேரணி பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.
மழை நீர் சேமிப்பின் அவசியம் குறித்து விளக்கவுரையளிக்கப்பட்டது.
இதில் துணைத் தலைவர் சையது, பேரூராட்சி உறுப்பினர்கள் சண்முகமுத்து,
வைரவராஜ், ஆனந்த், உதயசண்முகம், பாண்டி மீனாள்சேகர், அங்காள பரமேஸ்வரி
நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.