தினகரன் 06.08.2013
மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் மழை சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடந்தது. அதை பேரூராட்சி தலைவர் விஜயா கதிர்வேல் துவக்கி வைத்தார்.
கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சி மெயின் ரோடு வழியாக பழைய பேருந்து நிலையம், தேரோடும் வீதி, ஆர்.எஸ் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி துணைத்தலைவர் தேவராஜ், செயல் அலுவலர் ரவிக்குமார், கவுன்சிலர்கள் பாலக்குமார், சின்ன பெருமாள், உமா கந்தசாமி, சாவித்திரி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.