தினமலர் 09.04.2010
மாட்டுக்கறி கடைகளை அகற்ற கோர்ட் உத்தரவு
பெருந்துறை: பெருந்துறையில் உள்ள மாட்டுக்கறி கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது. பெருந்துறை ஈரோடு ரோடு, சந்தை பேட்டை எதிரில் தனியார் இடத்தில் மாட்டு கறி கடைகள் உள்ளன. கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், அப்பகுதியிலேயே கொட்டப்படுவதால், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கறி கடைகளை அகற்ற கோரி, பெருந்துறை டவுன் பஞ்சாயத்தில் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். பஞ்சாயத்து சார்பில் கடைகளை எடுக்க சொல்லி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து கடைக்காரர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாட்டு கறி கடைகளை அகற்ற பெருந்துறை டவுன் பஞ்சாயத்துக்கு உத்தரவிட்டது. மேலும் கறி கடைகாரர்கள் 15 நாட்களுக்குள் மாற்று இடம் தேர்வு செய்து, பஞ்சாயத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் 50 நாட்களுக்கு மேலாகியும், கறி கடைகாரர்கள் மாற்று இடம் தேர்வு செய்யவில்லை.ஆகவே மாட்டு கறி கடைகளை பஞ்சாயத்து நிர்வாகம் அகற்ற முடிவு செய்துள்ளது. இத்தகவலை பஞ்சாயத்து துணைத் தலைவர் திருமூர்த்தி தெரிவித்தார்.