தினத்தந்தி 31.10.2013
மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் நிலைய பணிகள்; மேயர் ராஜன் செல்லப்பா ஆய்வு

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையம் அமைக்கும் பணிகளை மேயர் ராஜன் செல்லப்பா திடீர் ஆய்வு செய்தார்.
மேயர் ஆய்வு
மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–
மதுரை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக பஸ் நிலையத்தின்
முன்பகுதியில் ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்கள் நிறுத்தப்படுவதால்
பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் வாடகை வாகனங்களை முறைப்படுத்தும் வகையில் பஸ்
நிலையத்தில் ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் நிறுத்துவதற்கு ஆட்டோ பே முறை
அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ரூ.33 லட்சம் செலவில்
இதற்காக ரூ.33 லட்சத்து 30 ஆயிரம்
மதிப்பீட்டில் பேவர் பிளாக் பதிக்கும் பணிகளும், பிளாட்பாரம் அமைத்து
இரும்பு வேலி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை
மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.
அப்போது அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனை அடுத்து மாட்டுத்தாவணி ஆம்னி பஸ்
நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். அங்கு கூடுதல்
கழிப்பறைகளை அமைத்து பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும்
அறிவுரை கூறினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.