தினமலர் 05.08.2010
மாட்டுத்தாவணி கடைக்கு சீல்
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இரண்டு ஓட்டல்களுக்கு மட்டுமே காஸ் வைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு முரணாக மண்ணெண்ணெய் அடுப்பு வைத்திருந்த ஒரு டீக்கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, “சீல்‘ வைக்கப்பட்டது. நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது, என மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்தார். ஆய்வில் உதவி கமிஷனர்கள் ஆசைத்தம்பி, ராஜகாந்தி,சந்தை கண்காணிப்பாளர் பழனிவேலு பங்கேற்றனர்.