தினமணி 06.05.2010
மாட்டுத்தாவணி ஹோட்டல்களில் காலாவதி உணவு பறிமுதல்
மதுரை,மே 5: மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் உள்ள ஹோட்டல்களில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். மாநகராட்சி நகர்நல அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் 12 பேர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். 15 ஹோட்டல்களில் ஆய்வு செய்யப்பட்டதில் 9 கடைகளில் காலாவதியான மற்றும் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.