தினமணி 12.01.2010
மாணவியருக்கு பொங்கல் வாழ்த்து
பொள்ளாச்சி, ஜன. 11: பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்குப் பொங்கலை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரத்தை நகர்மன்றத் தலைவி டி.ராஜேஸ்வரி திங்கள்கிழமை வழங்கினார் (படம்). சுமார் 100 ஆண்டுகள் ஆன பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி கோட்டூர் சாலையில் ரூ.8.40 கோடி செலவில் தமிழகத்திலேயே முன் மாதிரியாகக் கட்டப்பட்டது. இப்பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றும் பெறப்பட்டது.
இப்பள்ளி கடந்த 4-ம் தேதி முதல் புதிய கட்டடத்தில் செயல்படுகிறது.
பள்ளி புதிய கட்டடத்தில் செயல்படுவதை முன்னிட்டுப் பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவி டி.ராஜேஸ்வரி மாணவியருக்குப் பொங்கல் வாழ்த்துகளையும், இனிப்பு மற்றும் காரத்தையும் திங்கள்கிழமை வழங்கினார்.
நிகழ்ச்சியில்,முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். ராஜூ, நகர்மன்ற உறுப்பினர்கள் ரங்கநாதன், கெüதமன், மெக்சன் மணி, செண்பகம், ராதா, மீனாட்சி செவ்வேள் ஆகியோர் பங்கேற்றனர்.