தினமணி 18.11.2009
மாண்டிசோரி பள்ளிகளுக்கு கருவிகள் வழங்க மேயர் உத்தரவு
சென்னை, நவ.17: மாண்டிசோரி கல்வி கற்றல் முறைக்கு தேவையான உபகரணங்களை வழங்குமாறு, கல்வி அலுவலர்களுக்கு மேயர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
சென்னை மாநகராட்சியும், ரோட்டரி சங்கமும் இணைந்து மாநகராட்சி மழலையர் பள்ளிகளைச் சேர்ந்த 61 ஆசிரியைகளுக்கு, ரூ. 12.50 லட்சம் செலவில் ஓராண்டு மாண்டிச்சோரி பயிற்சி அளித்தன.
பயிற்சி முடித்த ஆசிரியைகளுக்கு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மேயர் மா. சுப்பிரமணியன் சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது, மாண்டிசோரி கல்வி கற்றல் முறைக்குத் தேவையான உபகரணங்களை வழங்குமாறு, மேயரிடம் ஆசிரியைகள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, மாண்டிசோரி பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்குமாறு, கல்வி அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.