தினமணி 20.11.2010
மாதம் ஒருமுறையே கொசு மருந்து தெளிப்பு: மாநகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர் புகார்வேலூர்
, நவ. 19: வேலூரில் மாதம் ஒருமுறை மட்டுமே கொசு மருந்து தெளிக்கப்படுகிறது என்று மாநகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.வேலூர் மாநகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் மேயர் ப
.கார்த்திகேயன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சீனுவாசகாந்தி பேசுகையில்
, வேலூரில் நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றார்.இதற்கு பதிலளித்து ஆணையர் செல்வராஜ் பேசுகையில்
, பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் உள்ளதால் நாய்களுக்கு ஆன்ட்டி ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றார்.மழைநீர் கட்டமைப்பு இல்லாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்க வலியுறுத்தல்
காங்கிரஸ் உறுப்பினர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில்
, வேலூரில் கொசுத்தொல்லை அதிகம் உள்ளதால், தெருக்களில் மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. மாதம் ஒரு முறை மட்டுமே கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும். மழைநீரை சேகரிப்பதால் நிலத்தடி நீர் அதிகமாகும் என்றார்.“
வாரம் ஒரு முறை கொசுமருந்து தெளிக்கப்படும். தெளிக்காத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று மேயர் பதிலளித்தார். மின்வாரியத்துக்கு ரூ.8 கோடிமதிமுக உறுப்பினர் அருணாசலம் பேசுகையில்
, மின்வாரியத்துக்கு மாநகராட்சி எவ்வளவு கட்டண நிலுவை வைத்துள்ளது என்றார். இதற்கு பதிலளித்த மேயர், ரூ.8 கோடி செலுத்த வேண்டும் என்றார்.புதை சாக்கடை குறித்து அதிகாரிகள் சரிவர விளக்கம் அளிப்பதில்லை என்று திமுக உறுப்பினர் முன்னா ஷெரீப் புகார் கூறினார்
.அதிமுக மாரிமுத்து பேசுகையில்
, எனது வார்டில் 20-க்கும் மேற்பட்ட குழல் விளக்குகள் எரியாததால், இருண்டு கிடக்கிறது என்றார்.ஓட்டேரியில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
தேமுதிக உறுப்பினர் பாலசுந்தரம் பேசுகையில்
, புதை சாக்கடைக்கு சிறிய டேப் அடித்து விட்டு பள்ளத்தை தோண்டி விடுகின்றனர்.இதனால் விபத்துகள் நேரிடுகின்றன
. தடுப்புக் கட்டைகள் அமைக்க வேண்டும். ஓட்டேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். தண்ணீர் வரத்தே இல்லாமல் உள்ளது. மழை பெய்தால் தெருக்களில் நடந்து செல்லவே முடியவில்லை என்றார்.இதையடுத்து
, வேலூருக்கு இம்மாதம் 27-ம் தேதி முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாநகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளுமாறு மேயர் அழைப்பு விடுத்தார். மாநகர்மன்ற துணைத் தலைவர் தி.அ.முகமது சாதிக், ஆணையர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.