தினமலர் 05.05.2010
மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் ‘கட்‘
திருச்சி: குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று ஒரு நாள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
திருச்சி மாநகராட்சி குடமுருட்டி அருகே பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. உறையூர், மரக்கடை, விறகுபேட்டை ஆகிய இடங்களிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் இன்று (5ம் தேதி) ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. குடிநீர் வினியோம் நிறுத்தும் பகுதிகள்: மரக்கடை, பெரியகடைவீதி, வளையல்காரர் தெரு, பூலோகநாத ஸ்வாமி கோவில் தெரு, மதுரை ரோடு, பாலக்கரை, இ.பி., ரோடு, பெரிய சவுராஷ்டிரா தெரு, விறகுபேட்டை, வரகனேரி, எடத்தெரு, தாராநல்லூர், காமராஜ் நகர், உறையூர், நவாப் தோட்டம், பாண்டமங்கலம், கோணக்கரை, திருத்தாந்தோணி ரோடு, பாளையம் பஜார், ஹவுஸிங் யூனிட், கல்நாயக்கன் தெரு, மேட்டுத்தெரு, நாச்சியார் பாளையம். இப்பகுதிகளில் நாளை முதல் வழக்கம் போல் குடிநீர் வினியோம் செய்யப்படும் என திருச்சி மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தெரிவித்துள்ளார்.