தினமணி 03.07.2013
தினமணி 03.07.2013
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கழிவுநீர் பாதைகள்,
கால்வாய்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டு தங்கு தடையின்றி மழைநீர் சென்று
ஏரி, குளங்களில் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கழிவுநீர் பாதைகள்,
கால்வாய்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டு தங்கு தடையின்றி மழைநீர் சென்று
ஏரி, குளங்களில் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாநகராட்சி சார்பில் மழைக் காலத்தில் குடியிருப்புப்
பகுதிகளுக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க அஸ்தம்பட்டி மண்டலத்தில் 4-ஆவது
கோட்டம் மிட்டாபுதூர் பிரதான சாலை, 5-ஆவது கோட்டம் அழகாபுரம் பிரதான சாலை,
6-ஆவது கோட்டம் ராமசாமி நகர், 7-ஆவது கோட்டம் திருநகர், 8-ஆவது கோட்டம்
பங்களா நகர், 12-ஆவது கோட்டம் கிழக்குத் தெரு 1 மற்றும் 2, 13-ஆவது கோட்டம்
இட்டேரி சாலை, 15-ஆவது கோட்டம் கிருபா மருத்துவமனை அருகில், 29-ஆவது
கோட்டம் வெங்கட்டப்பன் சாலை, 30-ஆவது கோட்டம் கண்ணாரத் தெரு, 31-ஆவது
கோட்டம் சன்னதி தெரு ஆகிய 11 கோட்டங்களில் கழிவுநீர் பாதைகள், கால்வாய்கள்
தூர்வாரும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பணிகளை மேயர் எஸ்.சௌண்டப்பன், ஆணையர் மா.அசோகன், அஸ்தம்பட்டி
மண்டலக் குழுத் தலைவர் கே.மாதேஸ்வரன் ஆகியோர் திங்கள்கிழமை நேரில்
பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் போது உதவி ஆணையாளர் ஆர்.பிரித்தி, மாமன்ற உறுப்பினர்கள்
கே.முருகன், எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன்,
சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.