தினமணி 09.11.2014
மாநகராட்சிப் பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமை மேயர் அ. ஜெயா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். ஸ்ரீரங்கம் கோட்டத்தைச் சேர்ந்த 188 பணியாளர்கள் இதில் பங்கேற்றனர். இவர்களில் 83 பேருக்கு கண்களில் குறைபாடு இருப்பது தெரியவந்து, மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நகர்நல அலுவலர் டாக்டர் மாரியப்பன், உதவி ஆணையர் பா. ரெங்கராஜன், உதவிச் செயற்பொறியாளர் அமுதவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அனைத்துக் கோட்டங்களிலும் இதேபோன்ற முகாம் மாநகராட்சிப் பணியாளர்களின் நலனுக்காக நடத்தப்படும் என மேயர் தெரிவித்தார்.