தினமணி 03.10.2013
மாநகராட்சியில் கண்காணிப்புக் காமிரா
மதுரை மாநகராட்சி கணினிப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மதுரை
மாநகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்று கணினிப் பிரிவில் சமீபத்தில்
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, தெற்கு சட்டப்பேரவை
உறுப்பினர் ரா.அண்ணாதுரை ஆகியோரின் பெயரில் இறப்புச் சான்றுகள் வெளியானது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சியின் ஆவண அறையில்
கணினியில் பெண் ஊழியர் மீனாவின் ரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தி போலியாக
சான்று தயாரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட திமுக
இளைஞரணி நிர்வாகி மற்றும் மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர், சான்றுகள்
வாங்கித் தரும் தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து,
கணினிப் பிரிவு உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்புக் காமிராக்கள்
பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலக வட்டாரங்கள்
தெரிவித்தன.