மாநகராட்சியில் சட்ட உதவி மையம் திறப்பு
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் சட்ட உதவி மையத்தை முதன்மை நீதிபதி நேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சட்டம் உதவி மையம் திறப்பு விழா மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேயர் ஜெயா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதில் வேல் முருகன், உதவி மையத்தை தொடங்கி வைத்து பேசுகையில், சட்ட உதவி மையங்களை நாடி வரும் மக்கள் எவ்வித செலவின்றியும், இலவசமாக அவரது பிரச்னைகள் தீர வழி காணலாம். எவ்வித கட்டணமும், யாரிடமும் செலுத்த வேண்டிய தேவையில்லை. பொதுமக்கள் தேவையான சட்ட உதவி மற்றும் சட்ட ஆலோசனைகளுக்கும் மேலும் சட்டம் சாராத பிரச்சனைகளுக்கும் தீர்வு காண சட்ட உதவி மையங்களை நாடி பயன் பெறலாம் என்றார். இந்நிகழ்ச்சியில் நீதிபதி பாலராஜாமணிக்கம், சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் பார்த்தசாரதி, கூடுதல் நீதிபதிகள் சக்தி, ஜெயராஜ், மாநகராட்சி மேல் முறையீட்டு தீர்ப்பாய தலைவர் ஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.