தினமணி 08.02.2014
மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகிக்கப்படும் பகுதிகள்
மாநகராட்சியில் பிப்ரவரி 9இல் (ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை மாநகராட்சியில் வடகரை மற்றும் தென்கரைப் பகுதிகளில்
ஞாயிற்றுக்கிழமை குடிநீர் விநியோகிக்கப்படும் இடங்கள் மற்றும் நேர விவரம்
தொடர்பான அறிவிப்பு வருமாறு:
ரேஸ்கோர்ஸ் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள்: வல்லபாய் சாலை,
ஜவஹர் சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, காக்கைபாடினியார் பள்ளி, ராமமூர்த்தி சாலை,
பாரதிஉலா சாலை, சிங்கராயர் காலனி, நரிமேடு பிரதான சாலை, பிடிஆர் சாலை, பீபி
குளம் பெசன்ட் சாலை, அதிகாலை 3.30 முதல் காலை 6 வரை. செல்லூர் மேல்நிலைத்
தொட்டி விநியோகப் பகுதிகள்: காலை 4 முதல் காலை 6 வரை.
புதூர் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள்: அழகர் நகர் 1 முதல் 7
தெருக்கள், கற்பக நகர் 4ஆவது தெரு முதல் 14ஆவது தெரு வரை, லூர்து நகர்,
ராமலட்சுமி நகர், காந்திபுரம், பெரியார் நகர், கன்னிமாரியம்மன் கோயில்
தெரு, கற்பக விநாயகர் கோயில் தெரு- காலை 6 முதல் மாலை 4 வரை.
ராஜாஜி பூங்கா மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள்: நரிமேடு சாலை,
முதலியார் தெரு, தாமஸ் வீதி, சின்னசொக்கிகுளம், சரோஜினி தெரு, கமலா 1,
2ஆவது தெருக்கள், கோகலே சாலை, பி.டி.காலனி, இந்திரா நகர், கோரிப்பாளையம்,
சாலைமுத்து சாலை, கரும்பாலை கிழக்குத் தெரு, காந்தி நகர், காலை 6 முதல்
மாலை 5 வரை.
கே.கே.நகர் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள்: மகாத்மா காந்தி
1ஆவது தெரு முதல் 8ஆவது தெரு வரை, பழைய எல்ஐசி காலனி, புதிய எல்ஐசி காலனி,
ஏரிக்கரை சாலை, மானகிரி, டெப்டி கலெக்டர் காலனி, காமராஜர் நகர், காலை 6
முதல் பகல் 12 வரை.
கோரிப்பாளையம், சொக்கிகுளம்,அண்ணாநகர் பகுதிகள்- மாலை 5 முதல் இரவு 7 வரை.
சுந்தரராஜபுரம் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள்: நல்லமுத்துப்
பிள்ளை தெரு, மேலத்தோப்பு, லாடப்பிள்ளைத் தெரு, காளியம்மன் கோயில் தெரு,
கிழக்குத் தெரு, மணிகண்டன் நகர், பாரதியார் தெரு, நந்தவனம், வில்லாபுரம்
பிரதான சாலை, காலை 7 முதல் பகல் 12.30 வரை.
ஆரப்பாளையம் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள்: எல்லீஸ் நகர்,
எஸ்எஸ் காலனி, மகபூப்பாளையம், அன்சாரி நகர் பகுதிகள், காலை 4 முதல் காலை 7
வரை.
பழங்காநத்தம் மேல்நிலைத் தொட்டி 2ஆவது பகிர்மானம்: பசும்பொன் நகர்,
கிழக்குத் தெரு, மருதுபாண்டியர் தெரு, பழங்காநத்தம், நேரு நகர்,
மாடக்குளம், விகேபி நகர், வடக்குத் தெரு, காலை 8 முதல் மதியம் 2 வரை.
ஜான்சிராணி மேல்நிலைத் தொட்டி 2ஆவது பகிர்மானம்: தென்னோலைக்காரத்
தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு மாரட் வீதி, தெற்கு வெளிவீதி,
நாடார் வித்யாசாலை, மீன்கடை, கு.கு.சாலை, மகால் மற்றும் பந்தடி தெருக்கள்,
பிற்பகல் 2.30 முதல் மாலை 6 வரை.
ஜோசப் பார்க் மேல்நிலைத் தொட்டி மற்றும் சன்னியாசி ஊரணி மேல்நிலைத்
தொட்டி பகுதிகள்: காமராஜர்புரம் பகுதிகள், பாலரங்காபுரம் மற்றும் சின்ன
கண்மாய் பகுதிகள், பங்கஜம் காலனி, தெப்பக்குளம் பகுதிகள், தமிழன் தெரு,
மீனாட்சி நகர் பகுதிகள், அனுப்பானடி பகுதிகள் முழுவதும், நரசிம்மபுரம்,
நவரத்தினபுரம் பகுதிகள், சீனிவாச பெருமாள் கோயில் தெரு, ரசாயனப் பட்டறை,
கீழசந்தைபேட்டை, மாலை 6 முதல் இரவு 11 வரை.