தினகரன் 28.06.2010
மாநகராட்சியை குறை கூறக்கூடாது நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மாநில அரசே பொறுப்பு
மும்பை, மே 28: ‘மழைக் காலத்தின்போது மும்பை யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதற்கு மாநில அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். மும்பை மாநக ராட்சியை குறை சொல்லக் கூடாது’ என்று சிவசேனா கூறியிருக்கிறது.
மித்தி ஆறு மும்பை விமான நிலையத் தின் ஓடுபாதைக்கு அடியிலும் ஓடுகிறது. கடந்த 2005ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பெரு மளவில் சேதம் ஏற்பட்டது. விமான நிலைய ஓடுபாதைக்கு அடி யில் மித்தி ஆறு தடையின்றி ஓடுவதற்கு வசதியாக அங்கு ரூ.150 கோடி செலவில் சுரங்கப்பாதை அமைக்கப் படும் என இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் அசோக் சவான் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மழைக் காலம் நெருங்குவதை யொட்டி மும்பையில் உள்ள சாக்கடைகளை சுத்தப்படுத் தும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளை சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் பார்வையிட் டார்.
அதன் பிறகு அவர் கூறியதாவது:
மித்தி ஆற்றை விரிவு படுத்தும் பணிகள் பூர்த்தி யாகாமல் இருந்து அதன் காரணமாக மழைக் காலத்தின்போது மும் பையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் மும்பை மாந கராட்சியை யாரும் குறை கூறக்கூடாது. மாநில அரசு தான் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். வெள்ளப் பெருக்கை தடுக்க வேண்டு மானால் மித்தி ஆற்றை விரிவு படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இது பற்றி கடந்த ஆண்டிலேயே மாநில அரசுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.