தினகரன் 08.06.2010
மாநகராட்சி ஆணையர் உத்தரவு மண்டல, வார்டு அதிகாரிகள் தலைமை அலுவலகம் வரக்கூடாது
பெங்களூர், ஜூன் 8: பெருநகர் மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு, தேவையில்லாமல் வரக்கூடாது என்று மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் ஆணையர் சுற்றோலை அனுப்பியுள்ளார்.
கடந்த 41 மாதங்களாக மக்களாட்சி இல்லாமல், அதிகாரிகளின் ஆதிக்கத்தில் மாநகராட்சி நிர்வாகம் இருந்து. இந்த சமயத்தில் மாநகரில் உள்ள 8 மண்டல அலுவலகம், 198 வார்டு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேவையில்லாமல் தலைமை அலுவலகம் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
தற்போது மாநகராட்சி மேயர் தலைமையில் நிர்வாகம் இயங்கிவருகிறது. இந்த நிலையிலும் மண்டலம் மற்றும் வார்டு அலுவலகங்களில் பணியாற்றும் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தலைமை அலுவலகத்திற்கு (பெருநகர் மாநகராட்சி கட்டிடம்) வந்து செல்வது வழக்கமாக உள்ளது. பொதுமக்கள் வருகையை காட்டிலும், கிளை அலுவலக ஊழியர்களின் வருகை அதிகம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால், தேவைகள் தொடர்பாக வார்டு அலுவலகம் செல்லும் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய அதிகாரிகள் இல்லாத பழையநிலையே தொடர்கிறது. எனவே, பொதுமக்கள் தலைமை அலுவலகத்தை நாடி வருவதும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டுள்ள ஆணையர் பரத்லால் மீனா, பல நிபந்தனைகள் அடங்கிய சுற்றோலை அனுப்பியுள்ளார். அதில், மண்டலம், வார்டு அதிகாரி மற்றும் ஊழியர்கள், அவசியம் இருந்தால் மட்டுமே தலை மை அலுவலகம் வர வேண் டும். இதற்கு சம்மந்தப்பட்ட அலுவலகத்தின் மேல திகாரியிடம் அனுமதி பெற்ற பின், அங்குள்ள லெட்ஜரில் பதிவு செய்ய வேண்டும். மேலும், தலைமை அலுவல கம் வந்து, அங்கு வைக்கப் பட்டுள்ள வருகை பதிவேட் டில், வந்த காரணம், யாரை சந்திக்கிறார்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும் என்பது உள்பட பல நிபந்த னைகளை விதித்துள்ளார்.