தினகரன் 19.01.2010
மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை: மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 23 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை மாநகராட்சி 8வது வார்டில் குருவிக்காரன்சாலை&எஸ்எம்பி காலனி இடையே சாத்தமங்கலத்தில் 23 சென்ட் நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானது. அந்த இடம் கழிவுநீர் கால்வாய்க்காக 1995ல் மாநகராட்சியால் தனியாரிடமிருந்து வாங்கப்பட்டது. குழாய் பதிக்கப்பட்ட பிறகு அந்த இடத்தை குப்பை கொட்டும் இடமாக மாநகராட்சி பயன்படுத்தி வந்தது. தற்போது அந்த இடத்தில் கட்டிடம் கட்டி டாஸ்மாக் மதுபான கடைக்கும், பார் நடத்தவும் வாடகைக்கு விட்டுள்ளனர். கட்டுமான பொருட்களை போட்டு வைக்கும் ஸ்டாக் யார்டாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற மதுரை கலெக்டர், மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், ராஜேந்திரன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சாமி, ராஜாராமன் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதிகள், Ôஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யÕ மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.