தினமணி 11.09.2009
மாநகராட்சி ஐடிஐ–யில் புதிய பாடப் பிரிவுகள்
சென்னை, செப்.10: மாநகராட்சி தொழில் பயிற்சி மையத்தில் (ஐடிஐ) 3 புதிய பாடப் பிரிவுகள் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) தொடங்கப்பட்டன.
சென்னை லாயிட்ஸ் காலனியில் மாநகராட்சி தொழில் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் கணினி இயக்குபவர், நிகழ்ச்சி தொகுப்பாளர், குழாய் பொருத்துனர் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பொருத்துனர் (ஃபிட்டர்), மின் பணியாளர், மோட்டார் மெக்கானிக் உள்ளிட்ட புதிய பாடப் பிரிவுகள் வியாழக்கிழமை சேர்க்கப்பட்டன. மேயர் மா. சுப்பிரமணியன் இந்தப் புதிய பாடப் பிரிவுகளை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு புதிய பாடப் பிரிவின் கீழும் 19 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தொடக்க விழாவில் பயிற்சி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன