தினமலர் 16.08.2010
மாநகராட்சி கமிஷனருக்கு தமிழக கவர்னர் பாராட்டு
திருச்சி: கொடிநாள் வரிவசூலில் சாதனை படைத்த திருச்சி மாநகராட்சி கமிஷனருக்கு தமிழக கவர்னர் சிறப்பு கேடயம், நற்சான்றிதழ் வழங்கினார்.இந்தியாவை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட தன்னலமற்ற சேவை புரிந்த முன்னாள் படைவீரர், அவர்களது குடும்பத்தினர் நல்வாழ்வுக்காக ஆண்டுதோறும் கொடிநாள் நிதி வரிவசூல் செய்யப்படுகிறது.அதன்படி, கடந்த 2008ம் ஆண்டு கொடிநாள் நிதிவரி வசூல் செய்ய திருச்சி மாநகராட்சிக்கு 7 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் அரசு நிர்ணயித்தது. இலக்கை விட கூடுதலாக 7 லட்சத்து 88 ஆயிரத்து 500 வ‘ல் செய்து மொத்தம் 15 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாய் மாநகராட்சி வரிவசூல் செய்தது.மாநிலத்திலேயே சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட திருச்சி மாநகராட்சிக்கு தமிழக அரசின் சிறப்பு கேடயம், நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.கவர்னர் மாளிகையில் நேற்று மாலை நடந்த சுதந்திரதின விழா விருந்தில் திருச்சி மாநகராட்சி கமிஷனர் பால்சாமிக்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா கேடயம், நற்சான்றிதழ் வழங்கி பாராட்டி, கவுரவித்தார்.