தினகரன் 01.08.2013
மாநகராட்சி கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மேயர்
மல்லிகாபரவசிவம், துணை மேயர் பழனிச்சாமி, மண்டலக்குழு தலைவர்கள் மனோகரன்,
கேசவமூர்த்தி, காஞ்சனா பழனிச்சாமி, முனியப்பன் மற்றும் கவுன்சிலர்கள்
சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை
தடுத்து தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு பெற்று தந்த முதல்வருக்கு
நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வது, ஈரோடு மாநகராட்சி
பகுதிகளில் தார்சாலைகள் சீரமைப்பதற்கு தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு
சேவை நிதிநிறுவனம் மூலம் ரூ.10.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு
நன்றி தெரிவித்துக் கொள்வது, ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாமன்ற
அரங்குடன் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டிடத்திற்கு புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர்.மாளிகை என பெயர் சூட்ட அனுமதி அளித்த முதல்வருக்கு மாநகராட்சி
மன்றம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வது என 3 தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.