தினமணி 26.09.2014
மாநகராட்சி சேவைபணிகள்: தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
திருச்சி மாநகராட்சியின் சேவைப் பணிகளில் ஈடுபடுவதற்கு பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநகரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களிடையே சமுதாயம் சார்ந்த குழுக்களை அமைத்து, அவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி, மாநகராட்சி சேவைப் பணிகளில் ஈடுபடுத்த தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் செப். 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: உதவி ஆணையர் (பணிகள்) த.ந. தனபாலன் செல்போன் எண்- 9894277411.