தினகரன் 20.08.2010
மாநகராட்சி டெண்டர் வழக்கு ஒத்திவைப்பு
பெங்களூர், ஆக. 20: பெங்களூர் மாநகராட்சியில் டெண்டர் இரவோடு இரவாக விடப்பட்டது தொடர்பாக வழக்கு வரும் திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் பெங்களூர் மாநகராட்சியில் ரூ.22 ஆயிரம் கோடி வளர்ச்சி திட்டபணிகளுக்கான டெண்டர் இரவோடு இரவாக விடப்பட்டது. இதனை ரத்து செய்ய கோரி முன்னாள் மேயர் பி.ஆர்.ரமேஷ் உட்பட பலர் உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர். நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர் மற்றும் மஞ்சுளா செல்லூர் அடங்கிய பென்ச் வழக்கை வரும் திங்கட்கிழமையன்று ஒத்திவைத்தனர்