தினமணி 01.11.2013
மாநகராட்சி துப்புரவுபணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கல்
திருச்சி மாநகராட்சியில் பணிபுரிந்து வரும்
துப்புரவுப் பணியாளர்கள் 1646 பேருக்கும் ரூ. 16 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட
சீருடைகளை மேயர் அ. ஜெயா வியாழக்கிழமை வழங்கினார்.
ஆண் தொழிலாளர்கள் 891 பேருக்கு காக்கி சட்டை, டிரெüசர் ஆகியவையும்,
பெண் தொழிலாளர்கள் 755 பேருக்கு பாலி காட்டன் புடவையும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக்,
நகரப் பொறியாளர் ஆர். சந்திரன், நகர்நல அலுவலர் டாக்டர் மாரியப்பன்,
கோட்டத் தலைவர்கள் ஜெ. சீனிவாசன், ஆர். ஞானசேகர், பொது சுகாதாரக் குழுத்
தலைவர் டாக்டர் எஸ். தமிழரசி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.