மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு யோகா பயிற்சி
ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈஷா யோகா மையம் சார்பில் முதல்கட்டமாக மாநகராட்சிகளில் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. கோவை மாநகராட்சியில் பணியாற்றும் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பயிற்சி முடிக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் 600 துப்புரவு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி தொடக்க விழா ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. பயிற்சி முகாமை மேயர் மல்லிகாபரமசிவம், மண்டல தலைவர் கேசவமூர்த்தி, ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து 5 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஈரோடு ஈஷா யோகா மைய நிர்வாகிகள் கூறினர்.