தினமணி 02.03.2010
மாநகராட்சி தேர்தல்: அரசு மனு தள்ளுபடி
பெங்களூர், மார்ச் 1: பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு தேர்தல் நடத்த கால அவகாசம் கேட்டு அரசு தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
÷மேலும் ஏற்கெனவே அறிவித்தபடி மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்லை நடத்தி முடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
÷இதுதொடர்பாக கால அவகாசம் கேட்டு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் வி. கோபால கெüடா, பி.எஸ்.பாட்டீல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
÷கால அவகாசம் கேட்டு அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அவர்களது உத்தரவில் கூறியிருப்பதாவது:
÷மாநகாரட்சித் தேர்தல் தொடர்பாக பிப்ரவரி 11-ம் தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே இறுதியானது. எனவே, அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
÷ஏற்கெனவே அறிவித்தபடி மார்ச் 31-ம் தேதிக்குள் பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்குத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.