தினமணி 25.02.2010
மாநகராட்சி தேர்தல்: இட ஒதுக்கீடு பட்டியலை அரசு வெளியிட்டது
பெங்களூர், பிப்.24: நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக மாநகராட்சிக்கு தேர்தலை நடத்த அரசு முன்வந்துள்ளது, இதுதொடர்பாக 198 வார்டுகளுக்கும் இட ஒதுக்கீடு செய்து பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
÷பெங்களூர் மாநகராட்சி மன்றத்தின் பதவிக்காலம் 2006-ம் ஆண்டு அக்டோபர்மாதத்துடன் முடிவடைந்தது. பிறகு இதுவரை மாநகராட்சி மன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தலை நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் 8 முறை உத்தரவிட்டும்பல்வேறு காரணங்களைக் கூறி தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்தே வந்தது.
÷இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அதில் மார்ச் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டு அப்பீல் செய்தது. இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அரசு அப்பீல் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பலமுறை உயர்நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் அணுகியும் பயனில்லாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. இதனால் தேர்லை நடத்த முன்வந்துள்ளது. தேர்தலை நடத்த வசதியாக 198 வார்டுகளுக்கும் இட ஒதுக்கீடு செய்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அரசு அறிக்கை வெளியிட்டது.