தினகரன் 07.06.2010
மாநகராட்சி, நகராட்சிகள் வாகனம் வாங்க கட்டுப்பாடு
கோவை, ஜூன் 7: தமிழக மாநகராட்சி, நகராட்சிகளில் அனுமதியின்றி வாகனங்கள் வாங்க அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
குப்பை வாகனங்கள், கட்டட இடிபாடு பொருள் அகற்றும் வாகனம், கழிவு நீர் வாகனம், குடிநீர் வாகனம், ஜேசிபி, பொக்லைன் உள்ளி ட்ட வாகனங்களில் உதிரிபாகங்கள், டீசல், பெட்ரோல் பயன்படுத்துவதில் முறைகேடு நடப்பதாக தெரிகிறது. பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சிகளில் வாகன பணி மனை கிடையாது. வெளி பணிமனைக்கு விடுவதிலும் மோசடிகள் நடக்கின்றன. புதிய வாகனங்கள் வாங்குவதில் விதிமுறை மீறல் நடப்பதாக புகார் வந்தது.
இதைதொடர்ந்து தமிழக நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார், தமிழக மாநகராட்சிகள், நகராட்சிகள், இரண்டாம் நிலை நகராட்சிகள் மற்றும் மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் அலுவலகங்களுக்கு வெளியிட்ட உத்தரவு:
புதிய வாகனங்கள் வாங்குவதற்கு நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் அலுவலக அனுமதி பெறவேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள் தாங்களாவே எவ்வித வாகனங்களையும் வாங்க கூடாது. அனுமதி பெற்று வாகனங்கள் வாங்கியதும், அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யவேண்டும்.
சாலை வரி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக பெறவேண்டும். எப்.சி இன்றி எந்த வாகனத்தையும் இயக்க கூடாது. வாகனங்களை முறையாக பராமரிக்கவேண் டும். லாக் புக், எண்ணெய் பதிவேடுகளை பயன்படுத்தவேண்டும்.
வாகனங்கள் எத்தனை கி.மீ தூரம் இயக்கவேண்டும், எப்போது டீசல், பெட்ரோல் போடப்பட்டது, அளவு என்ன என்பதை முறையாக குறிப்பிடவேண்டும். உயரதிகாரிகள் இதை ஆய்வு செய்யவேண்டும்.
‘கண்டம்’ செய்யும் நிலை யில் உள்ள வாகனங்களை பயன்படுத்த கூடாது. பொரு ளாதார ரீதியில் செலவு வைக்கும் வகையிலான வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.